மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், குற்றால மலை அருகில் அமைந்துள்ள அழகிய கிராமத்தில் பிறந்து, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், ஆனை மலை தொடரில் அணைக்கட்டுடன் கூடிய ஊரில் உறைவிடப் பள்ளியில் கல்வி பயின்று, கிழக்கு கடற்கரை ஓரம் பொறியியல் கல்லுரியில் கட்டடகலை இளநிலை, தமிழகத்தின் தலைநகரில் முதுநிலை முடித்து, இந்தியாவின் பெருநகரங்களில் பணிநிமித்தமாக நண்பர்களுடன் வாசம் செய்து, தற்சமயம் பாலைவனப் பிரதேசத்தில் பணிநிமித்தமாக குடும்பத்துடன் வசித்து வருகிறேன்.
இப்படியாக என்னுடைய வாழ்க்கையில் நடந்த சில சுவராஸ்யமான நிகழ்ச்சிகளையும், அனுபவங்களையும், இனி வாழப்போகும் வாழ்க்கையின் நம்பிக்கைகளையும், எதிர்பார்க்கும் மாற்றங்களையும் பதிந்து வைத்துக் கொள்ளும் சிறு பெட்டக முயற்சியே இது.
06 January 2008
Subscribe to:
Post Comments (Atom)


2 comments:
அடடடா.. என்ன தென்பொதிகையாரே,
குத்தாலத்திலிருந்து வரும் வேகமா இது?
பதிப்பு ஆரம்பித்த நேரத்திற்கு இன்னேரம் பட்டையைக் கிளப்பியிருக்க வேண்டாமா..? ம்ம்ம்.. கிளப்புங்கள்...
வருகைக்கு நன்றி சாருகேசி. தற்சமயம் பொதிகை மலை மொட்டை பாறையாக உள்ளது. சீக்கிரமே சாரல் அடித்து சீசன் தொடங்கி விடும் என்று தான் நானும் நம்புகிறேன்.
தென்பொதிகை.
Post a Comment